முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வீட்டிற்க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று மாலை நல்லகவுண்டம்பாளையத்தில் எம்.ஜி.ஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் செங்கோட்டையன் கலந்து கொள்வது தொண்டர்களை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிறு அன்று அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்ட குழு பாராட்டு விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்த நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி ழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி.. செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்..!
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்
அது சர்ச்சையான நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஒரு உதவி ஆய்வாளார் தலைமையில் 3 காவலர்கள் உட்பட 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இதையும் படிங்க: எடப்பாடியின் இமேஜை டேமெஜ் செய்ய திட்டம்... செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் பாஜக!