ஒரு இலைக்கு ரூ.3000... 21 உணவு வகைகள்… தவெக நிர்வாகிகளுக்கு படையல்..! லிஸ்டில் அப்படி என்னதான் இருக்கு..?
தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாகூட்டத்தில் பங்கேற்று உள்ளவர்களுக்கு தடபுடலாக 21-வகையான உணவு வகைகள் தயாராகி வருகின்றன.
காரட் அல்வா, மசால்வடை, காலிஃபிளவர், பூரி, உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா, வெஜ் பிரியாணி, தயிர்பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், அப்பளம், பீன்ஸ் பருப்பு, உசிலி , பூசணிக்காய், சௌசௌ, காரட், பின்ஸ் கூட்டு, ரசம், மோர், சால்ட், ஐஸ்கிரீம், ஊறுகாய், வாட்டர் பாட்டில், அடை பிரதமம் ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் காலை உணவுக்காக அனைத்து இருக்கைகளும் பிஸ்கட் மற்றும் குளிர பானங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு இலைக்கு ரூ.3000 ரூபாய் செலவாகுமாம். 3000 பேருக்கு உணவு தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: 3 குழந்தைகளுடன் 3 ஆண்டுகளாக அல்லாடும் பெண்... விஜய் ரசிகர்களால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்...!

விஜய் நடத்தும் கட்சி விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கு எப்போதும் சைவ உணவுகளையே வாங்கி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விஜய் முன்பு விருந்து வைத்துள்ளார். சென்னை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த விஜய், அவர்களின் குடும்பத்தினருடன் உரையாடினார்.

அந்த விருந்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு விஜய் பரிசு கொடுத்து கவுரவித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், அசைவ உணவு இல்லாமல், சாப்பாடு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, உருளைக்கிழங்கு பட்டாணி பொறியல், சௌசௌ கூட்டு, அப்பளம், வடை, பாயாசம், குலோப்ஜாமுன், ஊறுகாய் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. விருந்துக்கு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியாக விருந்து சாப்பிட்டுவிட்டு விஜயுடன் உரையாடி சென்றிருந்தார்.
இதையும் படிங்க: 'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!