தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை பற்றி கருத்து கூறுதல் உள்ளிட்டவற்றால் சிறைக்கும் சென்றுள்ளார். இந்த நிலையில் தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு.. அமைச்சரை பார்க்கப்போய் 5 நாள் சிறைவாசம் அனுபவித்த கொடுமை..!

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்த நிலையில், ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்ததாகவும், 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை என்றும் அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர் எனவும் கூறினார். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை என்று கூறியுள்ள அவர், தாக்குதல் நடத்தியவர்கள் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்

தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் தன்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களை ஏமாற்றினால்.. 2026ல் திமுக ஏமாறும்.. தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் பகிரங்க எச்சரிக்கை.!!