தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்த நிலையில் அதனை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் வழக்கு விசாரணைக்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிப்படுத்தினர். நடிகை விஜயலட்சுமியிடம் ஆடியோ ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர்.

அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடும் சச்சரவுகளைத் தாண்டி நேற்று இரவு 9:45 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். முன்னதாக தனது வழக்கறிஞர்களுடன் சென்னை வடபழனியில் உள்ள ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING போலீஸ் போட்ட திடீர் உத்தரவு... சீமான் கார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தம்... காரணம் என்ன?

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக தனது நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் சீமான் புறப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து வந்ததால் வடபழனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சென்ற சீமானுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் குவிந்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.360 டிகிரி கோணத்தில் கேமராக்கள் கண்காணிக்கும் வகையில் மொபைல் கேமரா கண்ட்ரோல் யூனிட்டுக்கள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் நடந்தால் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் 35 கேள்விகளுக்கான பதில்களை கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செம்பேடு பாபு ஆகியோர் கேட்டு விசாரணை நடத்தினர். சீமான் கூறும் பதில்களை போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்தனர். சுமார் 2 மணி நேரமாக சீமானிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது,காவல் நிலையத்திற்கு தாமதமாக வர காவல்துறையினரே காரணம் என தெரிவித்தார். காவல்துறைக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. விஜயலட்சுமி வழக்கு எனக்கு எந்த பின்னடையும் ஏற்படுத்தாது. விசாரணை, நெருக்கடியால் எனக்கு அழுத்தம் ஏற்பட்டது. போர் அடித்தால் விஜயலட்சுமி பேசுவார். திருமணம் செய்வதாக தான் எந்த உறுதியும் கொடுக்கவில்லை என தெரிவித்தார். விஜயலட்சுமி நடவடிக்கை காதலா? கன்றாவியா? என பேசினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். முதலமைச்சர் ஸ்டாலினை அப்பா எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை சீமான் கூறினார்.
இதையும் படிங்க: சற்று நேரத்தில் கைதாகிறா சீமான்..? காவல்துறையின் திட்டம் என்ன..? வளசரவாக்கத்தில் கொந்தளிப்பு..!