மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்த திட்டமிட்டனர். அங்குள்ள மக்களிடம் தமிழிசை கையெழுத்து வாங்க முற்பட்டபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், தமிழிசையில் கையெழுத்து இயக்கத்தை பற்றி கூற வேண்டும் என்றால், அவர் நடந்து கொண்ட நடவடிக்கையை அவரது தந்தை குமரி கடந்தன் பார்த்தால் மிகவும் வருத்தப்படுவார் என்று தெரிவித்தார். இவருக்கு போய் தமிழிசை என்று பெயர் வைத்து விட்டோமே என வருத்தப்படுவார் என்று கூறினார்..
இதையும் படிங்க: நாங்க பிடிவாதமா இல்ல, தெளிவா இருக்கோம்! பாஜகவை ரோஸ்ட் செய்த முதல்வர்.
,
கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் எனக் கூறியிருந்தனர். அவர்கள் எந்த இல்லத்திற்கு சென்றார்கள், அவர்களை சுற்றி பாஜகவினர் 10 பேரை வைத்துக் கொண்டு இதுவரை அவர் எண்ணியிருந்த பதவி கிடைக்காததால், அவரது இயக்கத்தைச் சார்ந்த தோழர்களை வைத்து கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் காலாவதி என்ற சொல்லை தமிழிசை பயன்படுத்தியதாக கூறிய அவர், காலாவதி ஆனவர் யார், புதுச்சேரியில் காலாவதியானவர், தென் சென்னை பாராளுமன்ற தேர்தலில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் தங்களை காலாவது என்று கூறுகிறார் என விமர்சித்தார்.

மேலும் அவரை காலாவதியாக்குவதற்கும் அவரது இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கும் தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில் தயாராக உள்ளனர் என்று கூறினார்
இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! மொழிச் சமத்துவமே திமுகவின் இலட்சியம் - முதல்வர் ஸ்டாலின்..!