கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சென்னப்ப நாயக்கனூரில் தனது நிலத்தில் தவெக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி சேட்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், ஊத்தங்கரை தாசில்தாரர் ஆகியோரிடம் விண்ணப்பித்து எந்த வித பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

தனது சொந்த நிலத்தில் தமிழக வெற்றிக் கழக கொடிக் கம்பத்தை அமைக்க அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாச்சியர், தாசில்தார் ஆகியோர் மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: இந்திக்கு எதிராக கையெழுத்து... விஜய்யை அவமதித்த பி.கே... அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான அடையாளமாக, அங்கீகாரமாக நினைக்கும் விஷயங்களில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி. டிஜிட்டல் யுகம் என்று கூறிக்கொண்டாலும் இன்றளவும் கொடிகளுக்கான உண்டான ஈர்ப்பு என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான், நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தும் விழாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்.

அதேபோன்று திராவிட கட்சிகளுக்கு இணையாக கிளைக்கழகம் வரை வளரவேண்டுமானால், கிராமங்கள் வரை கட்சியின் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியம். அதனால் தனியார் நிலமோ, பொது இடமோ கட்சிகள் தங்களின் கொடிகளை நாட்ட மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெளிவாக அறிவித்துள்ள நடிகர் விஜய், கிராமப்புற வாக்குகளை கவர வேண்டுமானால் தனது தவெக கட்சியை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். எனவே தான் ஒவ்வொரு கட்சி நிர்வாகியும் முடிந்தவரை கட்சிக்கொடிகளை மக்களிடம் அறிமுகப்படுத்துங்கள் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். இதன் பின்னணியில் இந்த வழக்கை பார்க்கும்போது முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
மேலும் திமுக அரசின் நிர்வாக ரீதியான குளறுபடிகளை, தவறுகளை மாவட்டந்தோறும் பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சென்று அவர்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் தவெக தலைமையிடம் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது கட்சிக்கொடி நடுவதில் இருந்து பஞ்சாயத்து ஆரம்பிக்கலாம்...
இதையும் படிங்க: தவெகவுக்கு கமல் சொன்ன திடீர் எச்சரிக்கை, புரிந்துக்கொள்வாரா விஜய்?