அந்த வகையில் அனைவருக்குமான பட்ஜெட் ஆக இது அமையும்" என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
அன்னை லட்சுமி தேவியை
வழிபட்டு விட்டு...

"ஏழைகள், நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வாரி வழங்கும்படி லட்சுமி தேவியை வேண்டுகிறேன். அவர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் . வெற்றியையும் விவேகத்தையும் அவர் தருவார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: கவலையில் கல்வித்துறை! குறைந்த நிதி, அதிக ஜிஎஸ்டி, குறைவான முதலீடு எப்போது களையப்படும்?
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அன்னை லட்சுமியை வழிபட்டு வருகிறேன்.
மூன்றாவது முறையாக சேவையாற்ற நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

மூன்றாவது முறை ஆட்சியில் பாஜக அரசு தாக்கல் செய்யும் இந்த முதல் முழு பட்ஜெட், அனைவருக்குமான திட்டங்களை உள்ளடக்கிய புத்தாக்கத்துக்கான பட்ஜெட்டாக அமையும். மக்களின் மேம்பாட்டுக்காகவே நாள்தோறும் பணியாற்றி வருகிறேன்.
மூன்றாவது முறை ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்த கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க பல மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மகளிர் முன்னேற்றத்திற்கான, இளைஞர்கள் நலனுக்கான சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவை நமது தாரக மந்திரமாக, அடுத்த இலக்குகளாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறது.
இது பெருமைக்குரிய விஷயம். இந்த தருணத்தில் உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநாட்டி இருக்கிறது. 2047 ஆம் ஆண்டு இந்தியா தனது நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நமது கனவு நிறைவேறும். அதற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிகாட்டும்.

நாளை தாக்கல் ஆக இருக்கும் மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன்".
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க: Budget 2025: வருமான வரி எப்போது அறிமுகம்? ஆங்கில நாளேட்டின் நிறுவனருக்கும்-பட்ஜெட்டுக்கும் சம்பந்தம் என்ன?