இந்த செயலிகள் பெரும்பாலும் வீடியோ, வாய்ஸ் ஃபிளாட்ஃபார்ம்கள், சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளோடு தொடர்புடைய செயலிகளாக இருந்ததால், இந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று கூகுள் நிறுவனம் லூமன் டேட்டாபேஸில் தெரிவித்துள்ளது. ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுவதுதான் லூமன் டேட்டாபேஸ் எனப்படுவது, செயலிகளில் வரும் கன்டென்ட்களை கண்காணிப்பது, நீக்குவது போந்ரவற்றை அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க செய்கிறது. இந்த 119 செயலிகளில் 15 செயலிகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்று மணிகன்ட்ரோல் தளம் தெரிவித்துள்ளது. பல செயலிகள் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு இதேபோன்று செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.சீனாவைச் சேர்ந்த ஷேர்சாட், டிக்டாக் போன்ற செயலிகளை தேசிய பாதுகாப்பு கருதி தடை செய்தது. 2020ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி ஏறக்குறைய 100 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் 2021 மற்றும் 2022ம் ஆண்டிலும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தகவல் உரிமைச்சட்டம் பிரிவு69ஏ-வின் கீழ் இந்த தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: தவிர்ப்பது எப்படி? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு 119செயலிகளுக்கு தடை விதித்தாலும், இன்னும் அந்த செயலிகள் ப்ளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. குறிப்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த சில்சாட் எனும் வீடியோ சாட் செயலி 10 லட்சம் பதிவிறக்கங்களை இந்தியாவில் கொண்டுள்ளது, 4.1 வரை ரேட்டிங் பெற்றுள்ளதால் அந்த செயலிக்கு விதிவிலக்கு கோரி மத்திய அரசை நாட இருக்கிறது அந்த நிறுவனம். இந்த செயலிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல சீனாவைச் சேர்ந்த பிளாம் எனும் நிறுவனம் சாங் செயலியை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும், ஷெலின் பிடிஒய் எனும் நிறுவனம் சார்பில் ஹனிகேம் எனும் செயலிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்கள் மத்திய அரசிடம் பேசி விதிகளுக்கு உட்பட்டு செயலிகளை இயக்க பேசுவதற்கு தாயராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக மணிகன்ட்ரோல் தளம் தெரிவித்துள்ளது. 10 லட்சம் பதவிறக்கங்களைக் கொண்ட சில்சாட் மூலம் ஏராளமான இந்தியர்கள் வெளிநாட்டில் உள்ள தங்களினஅ உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்கள். இந்த செயலியை முடக்கினால், இந்தியர்கள் ஏராளமனோர் பாதிக்கப்படுவர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த காரணங்களுக்காக இந்த 119 செயலிகளை தடை செய்தோம் என்று இதுவரை மத்திய அரசு வெளிப்படையாக அறிவி்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் வைத்த செக்... ஆதவ் அர்ஜுனாவிற்கு பறந்த அதிரடி உத்தரவு...!