ரூ.63 ஆயிரம் கோடி மதிப்புள்ள 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 28ம் தேதி (திங்கள்கிழமை) இறுதியாகி கையொப்பமாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து கொள்முதல் செய்கிறது.பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் செபாஸ்டியன் லீகார்ன் புதுடெல்லிக்கு வந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதாகத் திட்டமிட்டிருந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் அவரால் வரமுடியவில்லை என்பதால், பிரான்ஸில் இருந்தவாரே இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமாகிறது.
இதையும் படிங்க: இங்கே ஒரு பொத்தானை அழுத்தினால் நிமிடங்களில் எல்லாம் காலி..! அல்லுவிடும் பாகிஸ்தான்..!
இந்திய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் பிரான்ஸ் தூதர் டாக்டர் தியரி மாத்தோ ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள் எனத் தெரிகிறது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான கேபினெட் குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான(G2G) ஒப்பந்தம் என்பது இறக்குமதி செய்யும் நாட்டின் அரசுக்கும் ஏற்றுமதி செய்யும் நாட்டின் அரசுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு கொள்முதல் முறையாகும்.
இந்த கொள்முதலில் 22 ஒற்றை இருக்கை மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களும் அடங்கும். இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இந்த ரஃபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன.
ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட மிக்-29கே விமானங்கள் பல்வேறு கோளாறுகளை எதிர்கொள்வதால், உள்நாட்டு இரட்டை எஞ்சின் டெக்-அடிப்படையிலான போர் விமானம் பயன்படுத்தத் தயாராகும் வரை ரஃபேல் விமானங்கள் தற்காலிக தீர்வாகச் செயல்படும்.

இந்தியா தனது நீண்டகாலத் தேவைக்கு ஒரு தீர்வாக, இரட்டை எஞ்சின் கொண்ட போர் விமானங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்க இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்ய கடற்படை முடிவு செய்துள்ளது. கடற்படைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் வலுவூட்டப்பட்ட அண்டர்கேரேஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திடீரென தவெக தொண்டர் செய்த காரியம்; மிரண்டு போன விஜய் - வைரல் வீடியோ!