மியான்மர் நாட்டில் மையம் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா சார்பில் ஆப்ரேஷன் பிரம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மியான்மர், தாய்லாந்தில் கடந்த 29ம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 2300க்கும் மேற்பட்டோர் காயமைடந்துள்ளனர். இன்னும் கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் 6.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘334 அணு குண்டுகளின் சக்தி வெளிப்படும்’: மியான்மர் பூகம்பம் குறித்து புவியியல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை..!
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது தெரிந்ததவும், இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. 15 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் மூலம் “ஆப்ரேஷன் பிரம்மா” திட்டத்தை ஹிண்டன் விமானத் தளத்தில் இருந்து செயல்படுத்தியது இதில் போர்வைகள், தார்பாய்கள், மருத்துவ உபகரணங்கள், பாய், மெத்தை, சோலார் விளக்கு, உணவுப்பொருட்கள், சமையல் பொருட்கள், பாத்திரங்களை இந்தியா வழங்கியுள்ளது.

யாங்கான் நகரை 30ம் தேதி காலை 8 மணிக்கு அடைந்த இந்திய விமானத்தை அங்குள்ள இந்தியத் தூதர் வரவேற்றார். அந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், யாங்கோன் மாநில முதல்வரிடம் ஒப்படைத்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
முதல் விமானத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியா சார்பில் 2 விமானங்கள் ஆப்ரேஷன் பிரம்மா சார்பில் செல்கின்றன. இதில் ஒரு விமானத்தில் மீட்புப்படையினர், தேடுதல் கருவிகள், மீட்புப்கருவிகள், உயிர்காக்கும் கருவிகளோடு செல்கிறரு. மியான்மர் மீட்புப்பணிக்காக இந்தியா சார்பில் சி17 குலோப்மாஸ்டர் விமானமும், 3சி130ஜெ ஹெர்குலஸ் விமானமும் பயன்படுத்தப்படுகிறது.
இரு சி17 விமானங்கள் மூலம் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் கருவிகளோடு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வழங்கப்பட்டுள்ளது. இந்த மீட்புப்பணிக்கு இந்தியா சார்பில் ஆப்ரேஷன் பிரம்மா என பெயரிடப்பட்டு உதவிகள் மியான்மருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பெயர் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “ மியான்மரில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பில் அந்நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது, இந்த பேரழிவிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டு வர வேண்டும், நாட்டை கட்டமைக்க வேண்டும்.
பிரம்மா என்பது படைக்கும் கடவுள். இந்த நேரத்தில் மியான்மர் தேசத்துக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா செய்யும் உதவியால் அவர்கள் மீண்டுவந்து நாட்டை மீண்டும் கட்டமைக்கவே ஆப்ரேஷன் பிரம்மா எனப் பெயரிடப்பட்டது.
இதற்காக முதல்கட்டமாக மனிதநேய உதவிகள், பேரிடர் நிவாரனப் பொருட்களை இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது, மருத்துவ சேவைக்காக 118 பேர் சென்றுள்ளனர். பேரிடர் மேலாண்மை அமைப்பைச் சேர்ந்தவர்களும் மீட்புப்பணிக்காக ஆப்ரேஷன் பிரம்மாவில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீட்புப்படை கருவிகள், கான்க்கிரீட் கட்டிங் கருவிகள், வெல்டிங் கருவிகள், டிரில்லிங் எந்திரங்கள், கற்களை, கான்க்ரீட்களை உடைக்கும் கருவிகள், பெரிய சம்மட்டி, உள்ளி்ட்ட நவீன கருவிகளுடன் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஆய்வாளர் மெஹ்சின் ஷாகிதி கூறுகையில் “மியான்மரில் பூகம்பம் நடந்து 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரை மீட்புப்படையினர் ஆர்வத்துடன் ஈடுபடவும், அவர்களின் உழைப்புக்கு பலன் கிடைக்கவும் மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1600ஐ தாண்டிய மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை... தொடரும் தேடுதல் பணி..!