புதுடெல்லியில் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கும், இரவு தங்கும் கூடங்கள் போதுமான அளவில் இல்லை. ஏற்கெனவே இருக்கும் இரவு தங்குமிடுங்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் இருக்கிறது. போதுமான அளவில் இரவுதங்குமிடங்கள் உருவாக்கிக்கொடுக்க உத்தரவிடக் கோரி பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பிஆர் காவே தலைமையில் நீதிபதி ஏஜி மஷி அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. இதில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வ ழக்கிஞர் பிரசாந்த் பூஷனும், அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஏ.வெங்கடரமணியும், டெல்லி நகர்புற தங்கும்விடுதி மேம்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத்தும் ஆஜராகினர்.

அப்போது உச்ச நீதிமன்றநீதிபதி பிஆர் காவே குறிப்பிடுகையில் “பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசுகள் இலவசங்களை மக்களுக்கு வழங்குவதால், ஏழைகளை ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கைக்குள் தள்ளி, வேலை தேடுவதற்கும், பிரதான நீரோட்டத்தில் இணைவதற்கும், தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு அவர்களின் அனைத்து முயற்சியையும் இழக்கச் செய்கிறதா?
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் கவர்னர் வழக்கு.. 12 நறுக் கேள்வி கேட்ட நீதிமன்றம்..!
நாட்டின் வளர்ச்சிக்கு ஏழைகளை பங்களிக்க வைப்பதற்கு பதிலாக, நாம் ஒரு வகையான ஒட்டுண்ணியை உருவாக்கவில்லையா? இதுபோன்ற இலவசங்கள், மக்களை வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்காமல், விருப்பமில்லாமல் செய்துவிடும். வாழத் தகுதியற்ற தங்குமிடத்திற்கும், சாலையில் தூங்குவதற்கும் இடையில், எது மிகவும் விரும்பத்தக்கது? என கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையிலான வாதம், நகரில் வீடில்லாதவர்களுக்கான இலவசத் திட்டங்கள், இலவச ரேஷன் பொருட்கள் குறித்தும் தொடர்ந்தது. அப்போது நீதிபதி காவே குறிப்பிடுகையில் “ஏழைகளையும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட தேசிய நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்தான் சிறந்தவை.
எதார்த்த்தில் பார்த்தால், இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைத்தால், இலவசங்கள் கிடைத்தால் யாரும் வேலைக்குச் செல்ல விரும்பமாட்டார்கள். இலவச குடியிருக்கும் இடம், வேலை உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேநேரம், இதுவும் சமநிலைப்படுத்தப்பட வேண்டாமா” எனக் கேட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் “ கிராமத்தில் இருந்து ஏழை மக்கள், வேலைக்காக நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் அதற்கான புள்ளிவிவரங்கள் உள்ளன.

அவர்களுக்கு வேலை இருந்தால் வேலை செய்வார்கள். இல்லாவிட்டால் நகர்புறங்களுக்கு வந்துதான் வேலை தேட வேண்டும். வேலையும் குறைவாக இருக்கிறது, அவர்களுக்கு வருமானமும் அதிகம் இல்லை, தங்குமிடமும் இல்லை” எனத் தெரிவித்தார்.nஅரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கிடரமணி வாதிடுகையில் “ நகர்புறங்களில் ஏழ்மையை ஒழிக்க, மக்களுக்கு உதவ மத்திய அரசு திட்டங்கள் வகுத்துள்ளது, வகுத்தும் வருகிறது.

இதில் நகர்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு தங்குமிடம் திட்டங்களும் வரும். டெல்லிியல் 17ஆயிரம் பேர் தங்குவதற்குதான் தங்குமிடங்கள் உள்ளன, டெல்லி நகர்புற தங்குமிட வாரியம் 7 விடுதிகளை இடித்துவிட்டது” எனத் தெரிவித்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்த வழக்கறிஞர் காமத் “ 6 தற்காலிக தங்குமிடங்கள் 2023 யமுனையில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்டன” எனத் தெரிவித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏக்கள்.. தேர்தலுக்கு வாழ்நாள் தடை... நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?