உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் அமித் (வயது 25) இவரின் மனைவி ரவிதா (வயது 21). இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அமித் தினக்கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி காலை, அமீத் அவரது வீட்டு படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.
இதைப் பார்த்து அவரது மனைவி ரவிதா கத்திக் கூச்சல் போட்டார். அய்யோ என் புருஷன பாம்பு கடிச்சிருச்சே என அலறி உள்ளார். அவரின் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது அமித் மீது உயிருள்ள பாம்பு ஒன்று கொத்தியபடி இருந்தது. இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

பாம்பு கொத்திய உடன் உயிர் போகாது. அப்படி என்றால் அமீத் மரணம் பாம்பு கொத்தியதால் அல்ல என சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அமித் இறப்பில் சந்தேகம் அடைந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அமித் உடலை பத்து முறை பாம்பு கடித்திருப்பது தெரிந்தது.
ஆனால், பாம்பு கடிப்பதற்கு முன்பே அமித் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது கழுத்து எலும்புகள் முறிந்து உள்ளன. அவர் சுவாசிக்க சிரமப்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இதனால் உஷாரான போலீசார் அமித் மனைவி ரவிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கோண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: இத பிடிச்சா சளி சரியாபோயிடும்.? சிறுவனுக்கு சிகரெட் கொடுத்த டாக்டர்.. வீடியோவால் வந்த சிக்கல்..!

போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாவது; அமித்தின் நண்பர் அமர்தீப்புக்கும், ரவிதாவுக்கும் இடையே கடந்த ஓராண்டாக பழக்கம் இருந்துள்ளது. இருவரும் வீட்டில் ஆள் இல்லாத போது உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் ஒன்றாக இருந்ததை அமித் பார்த்துள்ளார். இதையடுத்து கணவன் -- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த உறவை விட்டு விடும்படி அமித் கூறிய நிலையில் அதனை ரவிதா ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் சண்டை அதிகமாகவே, அமித்தை கொலை செய்ய ரவிதாவும், அமர்தீப்பும் திட்டம் தீட்டியுள்ளனர்.

ரவிதாவி இந்த திட்டத்திற்கு காதலன் அமர்தீப் உதவியுள்ளார். அதன்படி கடந்த 12ம் தேதி இரவு அமித் வீட்டில் உறங்கியபோது, இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை இயற்கை மரணம் போல் காட்ட நினைத்துள்ளனர். இதற்காகவே 1,000 ரூபாய்க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, அதை அமித் மீது போட்டு கடிக்க வைத்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட முறை பாம்பை கடிக்க வைத்துள்ளனர்.
பின்னர் ஒன்றும் தெரியாதது போல் காலையில் எழுந்து ரவிதா கூச்சல் போட்டுள்ளார். பாம்புகள் பொதுவாக மனிதரை ஒருமுறை கொத்தினால் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடும். எனவே இந்த பாம்பு கடி எதேச்சையானது அல்ல என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அமித் மரணத்தில் பாம்பு அவர் உடல் மீதே இருந்ததும், 10 முறைக்கு மேல் கொத்தியதும் சந்தேகத்தை கிளப்பியது. விசாரணையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையும் படிங்க: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்.. பாராட்டி தள்ளிய உ.பி. மாஜி முதல்வர் அகிலேஷ்!!