மாட்டுப் பொங்கல் தினத்தன்று, “ பசு சம்ரக்சனா சலா” என்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பசுவின் கோமியத்தின் சக்தி குறித்தும், துறவிகளின் வாழ்க்கை குறித்தும் பேசுகையில் “ துறவியாக மாறிய ஒருவர் பெரும்பாலும் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களிடம் செல்லாமல் சுயமருத்துவம் எடுப்பார்கள். குறிப்பாக அதிக காய்ச்சல் இருக்கும்போது, பசுவின் கோமியத்தை குடிப்பார்கள்.

அந்த துறிவியின் பெயரை மறந்துவிட்டேன், ஆனால், அவர் பசுவின் கோமியம் மருந்து என்று குறிப்பிட்டார். காய்ச்சல் வந்த 15 நிமிடங்களில் பசுவின் கோமியத்தை குடித்தால் காய்ச்சல் நின்றுவிடும் எனத் தெரிவித்தார்.
பசுவின் கோமியம் என்பது பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி கொண்டது, பூஞ்சையை எதிர்க்கக்கூடியது, உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது, வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் மருத்துவ சக்தி கொண்டது” எனத் தெரிவித்தார்.
ஐஐடி இயக்குநர் வி.காமகோடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனமும், கேலியும் உருவாகின. திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், எதற்கும் சளைக்காத ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பதில் அளிக்கையில் “ பசுவின் கோமியத்தில் மருத்துவக் குணம் இருக்கிறது என எனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை. பசுவின் கோமியம் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் அமெரிக்காவில் வந்துள்ளன. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைத்தான் கூறினேன். பசுவின் கோமியத்தில் மருத்துவக் குணங்கள் உள்ளன என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் பசுவின் கோமியம் குறித்து ஆய்வு கட்டுரைகளின் பெயரையும் காமகோடி வெளியிட்டார்.
இதையும் படிங்க: இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சும்மாவா.? டெல்லி தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட பாஜக!

இந்தப் பிரச்சினை இத்தோடு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையும் கிளப்பியுள்ளார். சென்னை ரயில்வே இல்லத்தில் இன்று ஒரு நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகைியல் “ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவோம் அது எங்கள் உரிமை என்கின்றனர். மற்றொரு பிரிவினரோ பசுவின் கோமியம் நோய்களை நீக்கக்கூடியது என்கின்றனர். இதற்கு ஏன் விமர்சிக்கிறார்கள்.

மாட்டின் சாணத்திலும், கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து, அமிர்த நீர் எனத் தெரிவித்துள்ளனர், 80 வகையான நோய்களுக்கு கோமியம் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்கா, மியான்மர் நாடுகளில் உள்ள மக்கள் கோமியத்தை பயன்படுத்துகிறார்கள். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் தவறான தகவலைத் தெரிவிப்பாரா. என் உணவு என் உரிமை எனப் பேசும் நீங்கள், கோமியம் மருந்து என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் அதை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள். மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், ஏன் அறிவியல்பூர்வமாக மருந்து எனச் சொல்லப்பட்ட கோமியம் குடிப்பதை மட்டும் ஏன் ஏற்கமாட்டீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி முதலிடம் பிடித்த உத்தரப்பிரதேசம் - தமிழக அரசை தெறிக்கவிட்ட தமிழிசை செளந்தர ராஜன்!