இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மகாராஷ்டிராவின் கொங்கனில் உள்ள மால்வனில் ஒரு முஸ்லிம் நபர் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். விவகாரம் சூடுபிடித்து சிவசேனா எம்.எல்.ஏ நிலேஷ் ரானே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரின் காயலான் கடையை மால்வான் நகராட்சி நிர்வாகம் புல்டோசர் கொண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது.

இந்தியா -பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது ரோஹித் சர்மா அவுட்டானபோது கடை உரிமையாளர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் வீடியோ காட்சியை சிவசேனா எம்.எல்.ஏ., நிலேஷ் ரானே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!
நிலேஷ் ரானே எக்ஸ்தளப்பதிவில், 'கொங்கனின் மால்வனில் உள்ள ஒரு முஸ்லிம் பழைய இரும்பு, பேப்பர் கடை வியாபாரி, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்.' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த வெளிநபர் துரோகியை மாவட்டத்தை விட்டு விரட்டுவோம். ஆனால் அதற்கு முன்பு, அவரது காயலான் கடை வியாபாரம் முற்றிலுமாக அழிக்கப்படும். மால்வன் நகராட்சி மன்ற நிர்வாகம், காவல்துறை நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கில் உள்ள மால்வானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இரண்டு பேர் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது வாக்குவாதம் தொடங்கியது. இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை காலை, நகரத்தில் சட்டவிரோத வங்கதேசத்தினர் மற்றும் குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்பாளர்கள் பேரணி நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, பாபர் அசாம் 23 ரன்களும், இமாம்-உல்-ஹக் 10 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஜோடி 41 ரன்கள் பார்ட்னர் ஷிப்பை பகிர்ந்து கொண்டனர். ஆனால் ஹர்திக் பாண்ட்யா பாபரை ஆட்டமிழக்கச் செய்தார்.

இமாம் ரன் அவுட் ஆனார். பின்னர் சவுத் ஷகீல் (62) மற்றும் முகமது ரிஸ்வான் (47) ஆகியோர் 104 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை நிலையாக நிலைநிறுத்தினர். இருப்பினும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பிடியை இறுக்கினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதே நேரத்தில், ரோஹித் சர்மா 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, ஷுப்மான் கில் (46) மற்றும் விராட் கோலி (100) ஆகியோர் ரன்கள் சேர்த்து வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் (56) முக்கிய பங்கு வகித்தார். கோலியுடன் இணைந்து 114 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். ஆனால் கோஹ்லி 51வது ஒருநாள் சதத்தை அடித்தார்.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐ-க்கு எச்சரிக்கை மணி... டிரம்பின் அதிரடி டீல்… பாகிஸ்தானில் பதற்றம்..!