மத்திய பிரதேசம் மாநிலத்தில், நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு தாமதமாக வந்த பிரதமர் மோடி தான் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தேன் என்பதை விளக்கிய போது அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தினரும் நெகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர்.

இதுகுறித்து விரிவாக பார்க்கலாம், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி தலைநகர் போபாலில் ராஜ் பவனில் தங்கி இருந்தார். உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாகனங்கள் கிளம்பிய போது 15 நிமிடங்கள் தாமதமாக செல்லலாம் என மோடி ஒரே இடத்தில் அமர்ந்து விட்டாராம். எதற்காக 15 நிமிடங்கள் தாமதப்படுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொண்டார்களாம்.
இதையும் படிங்க: 10 பேருக்கு பிரதமர் மோடி விட்ட சவால்..! இந்திய மக்கள் உடல் நலன் மீது இவ்வளவு அக்கறையா..?

பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தனது கான்வாய் வாகனம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றபோதுதான் உடன் வந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தாமதப்படுத்தியதன் காரணம் தெரிய வந்ததாம். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி முதலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கோரினார்.

குறித்த நேரத்தில் என்னால் வந்திருக்க முடியும் ஆனால் தற்போது இங்கு பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வாரிய தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன் அதே நேரத்தில் நானும் கான்வாய் மூலமாக கிளம்பினால் மாணவர்கள் செல்வதற்கு முன்பாகவும் சென்ற பின்னும் சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்க கூடாது என்பதாலும் தாம் பத்திலிருந்து 15 நிமிடங்கள் தாமதப்படுத்தியதாக மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த மனிதாபிமான எண்ணத்துடன் கூடிய நற்செயலுக்கு அங்கிருந்த அனைவரும் ஒருமித்த கோஷத்தோடு கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டு தெரிவித்தனர் உலக அளவிலான பொருளாதார உச்சி மாநாட்டிற்கு வந்திருந்த உலக அளவிலான வணிக தலைவர்கள் பலரும் மோடியின் இந்த செயலை கண்டு நெகிழ்ந்து போயினர்.

மாணவர்கள் இந்தியாவின் எதிர்கால தூண்கள் அவர்கள் தேர்வு எழுதும் போது எந்த தடையும் இருக்கக் கூடாது இந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் ஒரு சடங்காக இருந்தாலும் அதுதான் கல்லூரி வேலைவாய்ப்புகளையும் வாழ்நாள் முழுவதும் தீர்மானிக்கிறது, மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்ற விஷயத்தில் மோடி உறுதியாக இருந்ததே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்த செய்தி குறித்து அறிந்த போபால் நகர பெற்றோர்கள் எக்ஸ் வலைதள பக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் மத்திய பிரதேச மாநிலத்திற்கான முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை மோடி அங்கு உறுதி செய்தார்
இதையும் படிங்க: அமெரிக்க நிதி உதவி விவகாரம்: மோடிக்கு எதிராக லண்டனில் சதி திட்டம் தீட்டிய ராகுல்; பாஜக திடுக் குற்றச்சாட்டு..!