நடுத்தர குடும்பங்கள், மாத ஊதியம் பெறுவோருக்கு நி்ம்மதியளிக்கும் வகையில், வருமானவரி விலக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவையில்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வருமானவரி சலுகை குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.

வருமானவரி விலக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ஆண்டு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மாதம் ரூ.ஒருலட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒருரூபாய் கூட அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இது தவிர நிரந்தரக் கழிவிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வருமானம் ஈட்டுவோர் ஒரு ரூபாய் கூட அரசுக்கு வரிசெலுத்தத் தேவையில்லை. இந்த அறிவிப்பு நடுத்தரக் குடும்பங்கள், மாத ஊதியம் பெறுவோருக்கு பெரிய நிம்மதியை அளிக்கும். வரி செலுத்தும் தொகை மிச்சமாகுவதால், அதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும், செலவிடுவது அதிகரிக்கும்.
புதிய வருமானவரி முறை(2025-26)
ஆண்டுக்கு ரூ.4 லட்சம்வரை வரியில்லை
ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை- 5 சதவீதம்
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை- 10 சதவீதம்
ரூ.12 லட்சம் முதல் ரூ.16லட்சம் வரை- 15 சதவீதம்
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம்: 25 சதவீதம்
ரூ.24 லட்சத்துக்கு மேல் – 30 சதவீதம் வரி
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
இதையும் படிங்க: தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு..! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!
இதையும் படிங்க: தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு..! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!