தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பல நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் சொல்லும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களை மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்ற போது விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களோடு இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருமாவளவன் எச்சரிக்கை.!

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களை பன்னாடு சுற்றுலா அழைத்து செல்கின்றோம் என்றும் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதல் முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை கூறியதாகவும் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்துக்கு நிதி கொடுக்க முடியாது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவிப்பு..!