மும்பை பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக தொடர்ந்வை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பலர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்து உள்ளது. அதாவது 81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது.
இந்த அளவுக்கு பங்குசந்தை சரிவதற்கு காரணம் பல கூறாலாம். அதாவது இந்திய சந்தையில் உள்ள நிறுவனங்கள் பல தங்களின் நெட்வொர்த்தை கூட்டி காட்டியுள்ளனர். இதன் உண்மை தற்போது தெரிய வந்ததால் பங்குச்சந்தையின் கூட்டப்பட்ட மதிப்பு குறைந்து முதலீட்டாளர்களை சரிவை நோக்கி செல்கிறது. வரும் காலங்களில் பங்கு சந்தை மேலும் குறையலாம் என்று கூறப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்கவும், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளன. மறுபக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் சில அதிரடி முடிவுகள் இந்திய பங்குசந்தையை ஆட்டம் காணப்பட்டுள்ளது. அதாவது, வரி விதிப்பு இந்தியாவில் பொருட்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கியது கூடுதல் சுமையாகவும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் போரில் உத்தி என்ன..? ஆபத்தான, அசிங்கமான நாடாக மாறிய அமெரிக்கா..!
அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதும் என இந்திய அரசு இருதரப்பு வர்த்தகத்தை சமப்படுத்த செய்யும் செயல்களால் இந்தியாவின் பண வீக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே டிரம்ப் விடுத்த அறிவிப்பில், மற்ற நாடுகளிடம் வசூலிக்கும் அதே கட்டணத்தை இந்தியாவிடம் இருந்து வசூலிக்க போவதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பால் இந்தியாவின் நிலைமை மேலும் மோசமாகும் என கூறப்படுகிறது. இந்தியாவின் மீதான வரி விதிப்பை டிரம்ப் அதிகரிப்பதை சொடக்கு போட்டு காட்டியது தானோஸ் சொடக்கு போடுவதை போல் உள்ளது. பிரதமர் மோடிக்கும், டிரம்புக்கும் நெருக்கமான நட்பு இருந்தாலும், இந்தியர்களை வெளியேற்றுவது, இந்தய பொருட்கள் மீதான வரி விதிப்பு போன்றவை இந்தியாவின் பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிங்க: 'சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே..!'- ஜெலென்ஸ்கியை- டிரம்ப் மிரட்டியபோது அங்கேயே கலங்கி அழுத பெண்..!