உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன் கர் பேசி இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துணை குடியரசு தலைவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது; அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன., ஆளுநர், துணை ஜனாதிபதி.. ஏன் ஜனாதிபதி பதவி கூட இன்று அரசியலாக்கப்படுகிறது., எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை சிறுமைப்படுத்த அரசமைப்புப் பதவிகள் அரசியல் ஆக்கப்படுகின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் மரியாதை..!

அரசமைப்பு சட்டங்கள் அரசியலாக்கப்படுவதுதான் தற்போதைய பிரச்னைக்கு காரணம் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முறையாக செயல்படுத்துவது தான் தற்போதைய தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு உயர் பதவியில் இருப்பவர்கள் என்றாலும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று கூறியுள்ள முதலமைச்சர், சரியான பாதையில் செல்வதற்கான வரலாற்று தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது என்றும் ஜனநாயகத்தின் மக்கள் பிரதிநிதிகளே அரசுகளை நடத்துகின்றனர், அலங்கார பதவி ஆளுநர்கள் அல்ல எனவும் சாடினார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் ஆடிப்போய் உள்ளதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!