ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. தற்போது ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான உரையாடலில், "இதுபோன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாத செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்திய ஒத்துழைப்பு தேவை. பயங்கரவாதத்தின் வேர்களை ஒழிக்கப்பட வேண்டும். இந்த துயரமான பயங்கரவாத சம்பவங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பகிரப்பட்ட பொறுப்பை எடுத்துக்காட்டுகின்றன. பிராந்திய நாடுகள் பச்சாதாபம், ஒற்றுமை, நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் பயங்கரவாதத்தின் வேர்களை ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட கட்டாயப்படுத்துகின்றன. இதன் மூலம் பிராந்திய நாடுகளுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்கின்றன. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் அமைதி மற்றும் நட்பின் தூதர்கள்'' என்று என்று வர்ணித்தார்.

இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களின் மதிப்புமிக்க மரபைக் குறிப்பிட்டு, ஈரான் இந்திய நாட்டின் மீதும், அமைதி, நட்பு, சகவாழ்வின் தூதர்களாக இருந்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற முக்கிய ஆளுமைகள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. இந்த உணர்வு அனைத்து நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளிலும் நீடிக்கும் என்று ஈரான் அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெடித்து சிதறிய கண்டெய்னர்கள்... ஈரான் துறைமுகத்தில் பயங்கரம்!!

இந்தியாவிற்கும், ஈரானுக்கும் இடையிலான வர்த்தகம், உள்கட்டமைப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையையும் ஜனாதிபதி பெஷேஷ்கியன் தெரிவித்தார். ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது, இந்தப் பகுதியில் இந்தியா, ஈரான், ரஷ்யா இடையேயான முக்கிய உரையாடலை மேம்படுத்த உதவும். இந்தியாவால் உருவாக்கப்பட்டு வரும் துறைமுகம் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்திற்கான பொன்னான வாய்ப்புகளுக்கான நுழைவாயிலாகக் கருதப்படுகிறது'' எப்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க தெஹ்ரானுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியை ஈரான் அதிபர் அழைத்தார். உரையாடலின் போது, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஈரானின் ஆதரவை பிரதமர் மோடி பாராட்டினார். ஈரானின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் நேற்று நடந்த பாரிய வெடிவிபத்தில் 14 பேர் கொல்லப்பட்டதற்கு அவர் "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்தார். குண்டுவெடிப்பில் ஈரானுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது ஈரான் அதிபரை சந்தித்த பிரதமர் மோடி, அப்ப்குதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான அவசியம் குறித்து தனது அரசு தெஹ்ரானுடன் முழுமையாக உடன்படுவதாகக் கூறியதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு இராஜதந்திர தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பு, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஈரான் முன்வந்தது. இரு நாடுகளையும் "சகோதர அண்டை நாடுகள்" என்று வர்ணித்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் சயீத் அப்பாஸ் அரக்சி, இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களைக் குறைக்க உதவ தெஹ்ரான் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்.. சமரசம் செய்ய விரும்பும் ஈரான்.!