மிகமுக்கியமான துறைமுகங்களில் ஈரான் நாட்டில் பந்தர் அப்பாஸ் துறைமுகமும் ஒன்று. இந்த துறைமுகம் உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த துறைமுகத்தின் ஒரு பகுதியில் வேதிப் பொருட்கள் கண்டெய்னரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிலையமும் செயல்பட்டு வருகிறது.

இதனால் அங்கு கச்சா எண்ணெய் தொட்டிகளும் உள்ளன. இந்த நிலையத்தில் இன்று பயங்கரமான சப்தத்துடன் திடீரென கண்டெய்னர்கள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவின.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்.. சமரசம் செய்ய விரும்பும் ஈரான்.!

இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையத்தில் உள்ள கண்டெய்னரில் இருந்த வேதிப்பொருட்கள் வெடித்ததாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதன் காரணமாக தான் பயங்கர வெடிசப்தம் கேட்டதாகவும் ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் வெளியிட்ட ஏவுகணை நகரம்.. அமெரிக்காவை எச்சரித்து வீடியோ வெளியீடு..!