ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 3நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்றார். இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், மாநில முதல்வர் ஓர் அப்துல்லா, துணை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்டங்கள், மத்திய அரசு நிதியுதவி குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், திட்டத்தின் காலக்கெடு, மத்திய அரசின் இலக்குகளை, திட்டங்களை மக்களிடம் சரியான விதத்தில் கொண்டு சேர்ப்பது குறித்து பேசப்பட்டது.
இதையும் படிங்க: 3 கோடி டன் பால் உற்பத்திக்கு இலக்கு.. உலகிலேயே இந்தியாவை முதல் நாடாக்க மத்திய அரசு உறுதி..!

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ஹூரியத் பிரிவினைவாத அமைப்பிலிருந்து 3 அமைப்புகள் விலகிவிட்டன. ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் தேசியக் கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீர் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஹரியத் அமைப்பிலிருந்து விலகிவிட்டன. இந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காண்பிக்கிறது.

பிரதமர் மோடியின் ஒருங்கிணைந்த மற்றும் சக்திவாய்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வை இன்று இன்னும் வலுப்பெற்றுள்ளது. ஹூரியத் பிரிவினைவாதத்தையும் பிரிவினைவாத அமைப்பையும் ஒதுக்கி வைத்து இதுவரை 11 அமைப்புகள் அசைக்க முடியாத ஆதரவை அறிவித்துள்ளன”
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும்.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!