சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், விருந்து உள்ளிட்டவற்றை தவிர்த்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கலந்து கொண்டார்.
நேற்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், பூத் கமிட்டி அமைப்பது, காலதாமதம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் முறையாக பூத் கமிட்டி அமைக்காதவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டித்தார்.

இந்த நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம் என்றும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இழந்த தொகுதிகளில் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!

பூத் கமிட்டி அமைக்காதவர்கள் பணிகளை துரிதப்படுத்துங்கள் என அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் என தெரிவித்தார். இதனிடையே, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற போதிலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எந்த கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலில் அவர் வரட்டும்.. விஜய் அரசியலுக்காக வெயிட்டிங்.. வெடி வெடிக்க காத்திருக்கும் விந்தியா..!