பாகிஸ்தானில் உள்ள பி.எம்.ஏ, காகுலில் நடந்த பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதற்றம் குறித்து பேசினார். ''இந்திய ஊடகங்களில் பாரம்பரிய பிரச்சாரம் மூலம் சமூக ஊடகங்கள் வரலாற்றை மாற்ற முடியாது'' என்று குற்றம் சாட்டிய அவர், முழுப் பிரச்சினையையும் இந்து-முஸ்லிம் பக்கம் திருப்ப முயன்றார். இரு தேசக் கோட்பாட்டை முழங்கினார்.

''வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். நமது மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், எண்ணங்கள், அபிலாஷைகள் இந்துக்களின் மதத்தில் இருந்து வேறுபட்டவை. முஸ்லிம்களும், இந்துக்களும் இரண்டு தேசங்கள் என்பதே இரு தேசக் கோட்பாட்டின் அடிப்படை. இரு தேசக் கோட்பாடு எப்போதும் பாகிஸ்தானின் இருப்புக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களின் மதம், நாகரிகம், மொழி மற்றும் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டவை.
இதையும் படிங்க: எல்.ஓ.சியில் பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 இந்திய வீரர்கள் பலி... ஸ்ரீநகர் விரைந்தார் ராணுவ தளபதி..!

நமது முன்னோர்கள் பாகிஸ்தானை உருவாக்குவதற்காக மகத்தான தியாகங்களைச் செய்துள்ளனர். புதிய நாட்டைப் பெறுவதற்காக அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். நமது தாய்நாட்டை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி கொடுப்பது குறித்தும் எங்களுக்குத் தெரியும்'' எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஏப்ரல் 16, 2025 அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வெளிநாட்டு பாகிஸ்தானியர்கள் மாநாட்டில், ''காஷ்மீர் பாகிஸ்தானுக்கு 'கழுத்து நரம்பு'. அதை ஒருபோதும் மறக்க முடியாது. இரு நாடுகள் கோட்பாட்டை ஆதரித்து, இந்துக்களையும், முஸ்லிம்களையும் வெவ்வேறு நாகரிகங்கள். இந்த சித்தாந்தம்தான் பாகிஸ்தானின் இருப்புக்கு அடிப்படை'' என்று கூறி இருந்தார்.

ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் சுமார் 4 முதல் 5 பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கினர். அவர்களின் ஷெல் தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கோபம் நிலவுகிறது. பயங்கரவாதிகளைத் தண்டிக்குமாறு மக்கள் அரசைக் கோருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: எல்.ஓ.சி.யில் பதற்றம்... பாகிஸ்தான் - இந்திய ராணுவம் நேருக்கு நேர் மோதல்: ஷெல் தாக்குதல்..!