காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.
இந்த மோசமான சம்பவத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குத் துப்பாக்கிச் சூட்டை பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் போட்டோ மற்றும் வரைபடம் வெளியிடப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை பிரிவான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. இருநாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகின்றன. இன்று காலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நம் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சூட்டுடன் சண்டை நடந்தது. இந்த சண்டையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: ஒவ்வொரு உயிருக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.. பழி வாங்குவோம்.. பாக்.-ஐ எச்சரித்த இந்தியா!!

இருப்பினும் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து பாகிஸ்தான் முதலில் தங்களுக்கும், காஷ்மீர் தாக்குதலுக்கு சம்பந்தம் இல்லை. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறியது.
இந்த நிலையில் தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரளிப்பதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி பாகிஸ்தான் - பயங்கரவாதிகளின் கூட்டு சதியை அம்பலமாக்கி உள்ளது. இதுதொடர்பான வீடியோவில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குகிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது. பயங்கரவாதிகளின் பின்னால் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், நாங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்காக அமெரிக்காவிற்கும், பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலைகளை செய்து செய்தோம். அது தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம்.
சோவியத் யூனியன் மற்றும் 9/11 தாக்குதலில் நாங்கள் பங்கேற்காமல் இருந்து இருந்தால் பாகிஸ்தானின் டிராக் ரெக்கார்ட் என்பது சரியாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். இதன்மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் ஒப்பு கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அதனை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை.. அதிரடியாக பறந்த உத்தரவு!!