பாலஸ்தீனியர்கள் கடந்த 60 நாட்களாக தங்கள் குடும்பத்தினருக்கு முறையான உணவுகளை வழங்க முடியாமல் பட்டினியோடு வாழ்ந்து வருகிறார்கள், உணவுப் பொருட்கள் எதையும் காஸாவுக்குள் கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்துள்ளது.

இதனால் கடந்த 60 நாட்களாக காஸா நகருக்குள் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ஏதும் கொண்டு செல்வில்லை. தொண்டுநிறுவனங்கள் வழங்கும் கேனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம்தான் பாலஸ்தினியர்கள் உயிர்வாழ்ந்து வருகிறார்கள், பாலஸ்தீனியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் உணவு வழங்க முடியாமல் துயரத்தில் உள்ளனர். கேனில் அடைக்கப்பட்ட பட்டானி பருப்புகள், கேரட், இறைச்சி, அரிசி உணவுகளை மட்டுமே பாலஸ்தீனியர்கள் அரைவயிற்றுக்காக உண்ணுகிறார்கள்.
இதையும் படிங்க: தேடி தேடி அழிக்கப்படும் மக்கள்... இஸ்ரேல் கொடூரம்... தவிக்கும் காசா!!
காஸா நகரைச் சேர்ந்த அல் நஜ்ஜார் எனும் பெண் கூறுகையில் “இஸ்ரேலுடன் போருக்கு முன்பாக நாங்கள் கேனில் அடைக்கப்பட்ட பட்டானியை சாப்பிட்டதே இல்லை. இந்த போர் எங்கள் வாழ்க்கையை அழித்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

இந்த போரால் ஏறக்குறைய 23 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் கேனில் அடைக்கப்பட்ட காய்கறிகள், அரிசி, பாஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள். இறைச்சி, பால், பாலாடை, பழங்களை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவட்டன, முட்டை, ரொட்டி ஆகியவற்றை பார்த்து அரிதாகிவிட்டது.
பாலஸ்தீனத்துடன் போர் நிறுத்தம் முடிவுக்குவந்தபின் கடந்த மார்ச் 2ம் தேதி முதல் காஸாவுக்குள் எந்த உணவுப் பொருட்களையும் இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிணையக் கைதிகளைவிடுவிக்கும் வகை உணவுப் பொருட்களை விடமாட்டோம் என இஸ்ரேல் பிடிவாதமாக இருக்கிறது.

ஆனால், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் மருத்துவர்கள் இஸ்ரேலிலில் உள்ள குழந்தைகளின் உடல்நலன் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எச்சரித்துள்ளனர். அவர்களுக்கு சரியான விகிதத்தில் சத்துணவு இல்லாததால் நீண்டகாலத்தில் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர்.
கான் யூனுஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவனையின் மருத்துவர் அய்மான் அபுதாகிர் கூறுகையில் “சத்துணவு இல்லாமல் குழந்தைகள் நோயில் விழுதல் அதிகரித்துள்ளது, இப்படியே சென்றால் பாலஸ்தீனிய குழந்தைகள் நிலைமை மோசமாகும். குழந்தைகளுக்காவது சிறப்பு சத்துப்பால் வழங்கலாம். மார்ச் மாதத்திலிருந்து 3700 குழந்தைகள் ஊட்டசத்துக் குறைபாட்டால் இருக்கிறார்கள் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு முட்டை, இறைச்சி, மீன், பால், பழங்கள், காய்கறிகள் தேவை, இவை இருந்தால்தான் அவர்களின் நோய் எதிர்ப்புசக்தி வலுவடையும். ஆனால் காஸா நகரில் இவை இல்லை” எனத் தெரிவித்தார்.
கான் யூனுஸ் நகரின் சாலைகளில் உள்ள கடைகள் பெரும்பாலும் காலியாக உள்ளன. குறைந்தளவு தக்காளி, வெள்ளரி, வெங்காயம் ஆகியவை மட்டுமே விற்கப்படுகின்றன. போருக்கு முன் ஒரு கிலோ தக்காளி ஒரு டாலருக்கும் குறைவாக விற்பனையான நிலையில் இப்போது ஒரு கிலோ தக்காளி 14 டாலருக்கு விற்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு,வாங்கும் சக்தி குறைந்துவிட்டது, மக்களுக்கு வருமானமில்லை ஆகியவற்றால் பட்டினியோடு பாலஸ்தீனியர்கள் வாழ்க்கை நகர்கிறது.
இதையும் படிங்க: உன்னை எப்படிம்மா கட்டிப்பிடிப்பேன்..? போரின் ரணத்தை உலகிற்கு உணர்த்தும் ஒற்றைப் புகைப்படம்..!