''ஜி.கே.மணி போன்றோர் வகித்த பொறுப்பை பறித்து, தனது மகன் அன்புமணியை தலைவராக்கினார் ராமதாஸ். ஜி.கே.மணியின் மகனுக்கு பாமகவில் வழங்கப்பட்ட பொறுப்பையும் குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்துவிட்டார். தனது செல்வாக்கை நிலைநிறுத்த ராமதாஸ் செய்யும் அரசியல் நாடகம் இது'' என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தற்போது வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடித்து வருகிறது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே பாமக நீடிக்க வேண்டும் என்பது அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் விருப்பம்.
இதையும் படிங்க: பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்... ராமதாஸ் அதிரடி முடிவு..!
ஆனால் பாமகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும்; அதிமுக வாக்குகள், பாமகவுக்கு கிடைக்கும் போது கட்சிக்கு கூடுதல் எம்.எல்.ஏக்கள் கிடைப்பர்; அதனால் அதிமுக அணிக்குதான் போக வேண்டும் என்பது அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நிலைப்பாடு. டாக்டர் அன்புமணி ராமதாஸ் தற்போது, பாஜக கூட்டணியில் அதிமுகவின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக தமக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என எதிர்பார்ப்புடன் இருந்தார் அன்புமணி ராமதாஸ். ஆனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தற்போது அன்புமணியின் பதவி காலம் முடிவடைய உள்ளது. தற்போது பாஜக- அதிமுக கூட்டணி இணைந்தால் மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிவிடலாம். இதன் மூலம் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசில் எப்படியாவது மத்திய அமைச்சராகிவிட முடியும் என்பதும் அன்புமணி ராமதாஸின் கணக்கு.
ஆனால், பாஜகவுடனான கூட்டணியால் பாமகவின் வாக்கு வங்கி மிக மோசமான நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது; பாமகவை காப்பாற்றுவதற்கு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும் என பிடிவாதம் காட்டுகிறாராம் ராமதாஸ்.

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகளால், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிளவுபடும் உருவாகி உள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாமகவின் தலைவராக இனி தாமே செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ''ஜி.கே.மணி போன்றோர் வகித்த பொறுப்பை பறித்து, தனது மகன் அன்புமணியை தலைவராக்கினார் ராமதாஸ். ஜி.கே.மணியின் மகனுக்கு பாமகவில் வழங்கப்பட்ட பொறுப்பையும் குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்துவிட்டார் . தனது செல்வாக்கை நிலைநிறுத்த ராமதாஸ் செய்யும் அரசியல் நாடகம் இது'' என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்குகிறது.. மேகதாது விவகாரத்தில் எச்சரிக்கும் ராமதாஸ்..!