பாஜக தலைவர் அண்ணாமலை எந்த நேரமும் பதவி விலகலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அண்ணாமலையை ரிப்ளே செய்ய தென்மாவட்ட தலைவரான நயினார் நாகேந்திரனை தலைவராக்க திட்டமிட்டுள்ளது.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைதீஸ்வரம் என்னும் கிராமம்தான் நந்யினார் நாகேந்திரனுக்கு சொந்த ஊர். 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்த நயினார் நாகேந்திரன் சொந்த ஊரிலே பள்ளிப்படிப்பை முடித்து, திருநெல்வேலியில் உள்ள எம்டிடி இந்து கல்லூரியில் இளங்கிலை பட்டம் முடித்தார். தொடர்ந்து ஆரல்வாய் மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க: தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? நயினாரை தொடர்ந்து மேலும் ஒருவர் விருப்பமனு; கமலாலயத்தில் குழப்பம்!!

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பேச்சுகளும் கொள்கைகளும் நயினார் நாகேந்திரனை இளம் வயதிலேயே சுண்டி இழுக்க எம்ஜிஆர் மறைந்த இரண்டு ஆண்டுகளில் 1989ல் அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக இணைந்தார். தீவிர ஈடுபாட்டுடன் கட்சிக்குள் இயங்கிய நயினார் அதிமுகாவில் அடுத்தடுத்த பொறுப்புகள் வந்து சேர்ந்தன.
ஜெயலலிதா விசுவாசி:
முதலில் பணக்குடி நகர செயலாளர். அடுத்து ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் என்று படிப்படியாக முன்னேறிய நயினாருக்கு முதன்முதலில் 2001 சட்டமன்ற தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. முதல் தேர்தலிலே 42,765 வாக்குகள் வெற்றி பெற்றார். அவருக்கு மின்சாரம் தொழில்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி கொடுத்து , அமைச்சர் அவையில் அமர வைத்தார் ஜெயலலிதா.

அதை தொடர்ந்து 2006 சட்டமன்ற தேர்தலில் பெறும் 606 வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லையில் வெற்றியை நழுவவிட்டவர். அடுத்த தேர்தலில் எதிர்பார்த்து காத்திருந்தார். இதனால் 2011 சட்டமன்ற தேர்தலிலும் நெல்லை தொகுதியில் அவரை களமிறக்கினார் ஜெயலலிதா.
2006ல் நழுவுவிட்ட வெற்றியை 2011ல் பற்றி பிடித்தார் நயினார் நாகேந்திரன், ஆனால் இந்த முறை அவருக்கு அமைச்சர் அவையில் இடம் கிடைக்கவில்லை. கட்சி பணியை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தவர் 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நெல்லையில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை வெறும் 601 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அவரை தோற்கடித்தது. தோல்வியால் தளர்ந்து போனவருக்கு ஜெயலலிதாவின் மரணமும் அதிமுகாவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பமும் அயற்சியை கொடுத்தன.
பாஜகவில் ஐக்கியம்:

முக்கிய புள்ளிகள் எல்லோரும் சசிகலா அணி இபிஎஸ் அணி தாவி கொண்டிருக்க நயினார் மட்டும் கட்சி விட்டு கட்சி தாவி பாஜகவில் ஐக்கியமானார். டெல்லி சகவாசம் கிடைத்தாலும் தாய் வீட்டை விட்டு கொடுக்காத நயினார் முக்கிய மேடைகளில் ஜெயலலிதாவின் புகழ்பாட மறப்பதில்லை. ஒருமுறை பாஜகவின் மேடையில் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி புல்லரிக்க பேசியவர் தான் கட்சியை விட்டு வெளியே வந்த கதை தெரிய வேண்டுமானால் அண்ணன் எடப்பாடியிடம் கேளுங்கள் என பொடிவைத்து முடித்தார். பாஜகவுக்கு சென்றதும் அவரது இந்துத்துவ பக்தியாகஆண்டாள் பத்தி பேசிய வைரமுத்திவின் நாக்கிற்கு 10 கோடி ரூபாய் விலைவைத்தார் இதனால் அவரது முகம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார்.
பாஜக எம்.எல்.ஏ டு எம்.பி. ஆசை:
சர்ச்சையோடு சர்ச்சையாக நெல்லை தொகுதியில் ஆக்டிவாக வளம் வந்தவருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது 2021ல் அமைந்த அதிமுகா பாஜாகா கூட்டணி. மீண்டும் நெல்லையில் களமிறங்கியவர் 23107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்குள் பாஜக உறுப்பினராக நுழைந்தார். சீனியர் என்ற முறையில் அவருக்கு பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் பதவியை வழங்கியது தலைஅமை. முஸ்லிம்கள் எதிர்த்த சிஐஏ தொடங்கி தமிழர்கள் எதிர்த்த நீட் வரை மத்திய அரசு திட்டங்களின் ப்ரமோட்டராக சட்டமன்றத்தில் ஆதரவு கொடுத்தார்.

ஆளுநர் - தமிழ்நாடு அரசு மோதல் விவகாரத்தில் ஆளுநருக்கான ஆதரவு குடல் எழுப்பினார். என்னதான் எம்எல்ஏவாக வலம் வந்தாலும் எம்பியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்கிற ஆசை நயினாரின் மனதிற்குள் ஆழமாக எழ, தன்னை பலமுறை எம்எல்ஏவாக்கி அழகு பார்த்த தனக்கு சாதகமான நெல்லை மக்களவை தொகுதியை கைப்பற்ற மறைமுகமாக காய்களை நகர்த்தினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரத்தையும் தொடங்கினார் எம்எல்ஏவுக்கு எம்பி ஆசை எட்டிப்பார்க்கிறது என்று பாஜகவிற்குள் எதிர்ப்பு குரல்கள் கிளப்பியது.
அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பா ஆளுநர் பதவியை எந்த நேரமும் கைவிட தயாராக இருந்த தமிழிசை சொந்த கட்சியை பாஜாகாவுடன் இணைத்துவிட்ட சரத்குமார் என பலரும் நெல்லையை குறிவைத்திருந்த சூழலிலும் 2024 மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு நயினார் நாகேந்திரனுக்கே வந்து சேர்ந்தது. இருப்பினும் சொந்த கட்சிக்குள் எதிர்ப்புகளையும் மீறி வாய்ப்பை தட்டி பறித்தவரை நெல்லை தொகுதி கைவிட மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகவே தனது பணியை தொடர்ந்து வருகிறார்.
அமித் ஷா தளபதி:
இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஆதிமுகாவுடன் மீண்டும் கைகோர்க்க தயாராகி வரும் பாஜகவிற்குள் நயினார் நாகேந்திரன் இன்னொரு ஜாக்பாட்டாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இதனால் பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகிறதா? என்கிற கேள்வியோடு இன்னொரு முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்ததால், அடுத்த தலைவர் யார் என துருவ தொடங்கின மீடியாக்கள்.

அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் கொங்கு பகுதியின் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தென் தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான சமூகத்தை குறிவைக்க பாஜக முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. அப்படி ஒரு நபரை பாஜக தேடி கொண்டிருக்க முன்னாள் அதிமுக தொண்டர், ஜெயலலிதாவின் புகழ்பாடும் விசுவாசி, அதிமுகவினருடன் இணக்கமாக பயணிக்கும் அரசியல்வாதி என அத்தனை பாக்ஸ்களையும் பிக் செய்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். இவரது செயல்பாடு தமிழக பாஜகவில் எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழக பாஜகவின் புதிய தலைவர் தேர்வு... அண்ணாமலையின் பெயர்- புகைப்படங்கள் நீக்கம்..!