ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினர்.

அதன் எதிரொலியாக பாக்., உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே பஹல்காமில் நடந்தது நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். இதில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இருப்போர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: காஷ்மீர் இந்தியாவோடது.. விஜய் தேவரகொண்டா அதிரடி..! கைகட்டி வேடிக்கை பார்த்த சூர்யா..!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானோர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் ராணும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், கவர்னர் சின்ஹா கூறினார். இந்த நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பழிவாங்க வேண்டும் என பாஜக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

அந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி, "ஹமாஸ் போன்ற தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை உதாரணமாக கூறி அதே மாதிரி பதிலடி கொடுக்கப்படும் பாஜக தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்த ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.
இதையும் படிங்க: எங்க அண்ணனை கொன்னவங்க சாகணும்..! காஷ்மீரில் உயிர்தியாகம் செய்த வீரனின் தங்கைகள் கண்ணீர்..!