காஞ்சிபுரம் குன்றத்தூரில் நடைபெறும் அரசு விழாவில் கலைஞர் கைவினை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது; கலைஞர் கைவினை திட்டம் என்பது சமூக நீதியை சம நீதியை மனித நீதியை மனித உரிமை நீதியை நிலைநாட்டும் திட்டம். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் மாணவர்களை கல்வியை விட்டு வெளியேற்றும்.
விஸ்வகர்மா திட்டத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது என இருப்பதை வேதனை அளிக்கிறது. சாதிய பாகுபாடு குலத்தொழில் திட்டத்தை ஊக்குவிப்பதாக இருந்த பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்தோம். 18 வயது என்பது ஒருவர் உயர்கல்வி பயிலும் வயதா அல்லது குலத்தொழில் செய்யும் வயதா? சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் திட்டத்தை எப்படி ஏற்பது. மனசாட்சி உள்ள யாரும் விஸ்வகர்மா திட்டத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டம் இல்லை. தாம் எடுத்துரைத்த மூன்று திருத்தங்களை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. பாகுபாடு இல்லாத திட்டத்தை உருவாக்க நினைத்த உருவானது தான் கலைஞர் கைவினை திட்டம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பாரம்பரியமாக செய்த தொழிலை மட்டுமே ஒருவர் செய்ய முடியும். தமிழக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியும்.
இதையும் படிங்க: யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல... துணை ஜனாதிபதிக்கு முதல்வர் பதிலடி..!
விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் களுக்கு மானியம் கிடையாது. மத்திய அரசின் திட்டத்தை விட கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 தொழில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 8 1951 பேருக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல கொள்கையின் ஆட்சி.

ஒரு காலத்தில் தந்தை செய்த தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என்ற முறை இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சிறுகுறு நடுத்தர தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவு சார் சொத்துரிமை மூலமாக புவிசார் குறியீடு பெறுவதற்காக வழங்கப்பட்டு வந்த மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். காக்களூர் தொழில்பேட்டையில் 3.90 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இவ்வாறு பேசினார்.
இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் மரியாதை..!