1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பணியாற்றிவர் கஸ்தூரி ரங்கன். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டிற்கி முக்கிய பங்கு வகித்து வந்தவர். மேலும் 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.பத்மபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர் கஸ்தூரி ரங்கன்.

84 வயதான கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கஸ்தூரி ரங்கன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார் இந்திய விமானப்படை கேப்டன்... யார் இவர்?

இதனிடையே இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். கஸ்தூரிரங்கன் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்ததாகவும் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ தலைவராகவும், தேசியக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி ரங்கன் அவர்களது மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!