ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது ஆங்காகே சடலங்கள் சிதறிக்கிடக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெளிவாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதையும் படிங்க: ஹூரியத் பிரிவினைவாத அமைப்பிலிருந்து 3 அமைப்புகள் விலகல்.. மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு..!
இதையும் படிங்க: ‘ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!