பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவ விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அதன் டயர்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. இந்த சம்பவம் காரணமாக, ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புல்வாமாவில் நடந்த குண்டுவெடிப்பில் பயங்கரவாதி அஹ்சன் உல் ஹக் ஷேக்கின் வீடு இடிந்து விழுந்தது. அவர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்.
இதையும் படிங்க: இந்தப் பக்கம் இந்தியா... அந்தப் பக்கம் பலூசிஸ்தான்... இனி இந்த ஆயுதம்தான் பாகிஸ்தானுக்கு சாவு மணி..!
இந்நிலையில் பலுசிஸ்தான் சுதந்திரப் போராளிகள் பாகிஸ்தான் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு வாகனம் முழுவதுமாக நாசமானது. பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அசாதரண சூழல் நிலவுகிறது. பலூச் விடுதலைப்படை வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்று பலூச் விடுதலைப்படை எச்சரிக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என திகிலடைந்து கிடக்கிறது பாகிஸ்தான் அரசு.
இதையும் படிங்க: அழும் இடத்திலிருந்தே கண்டிக்கப்பட்ட பாகிஸ்தான்... உலக நாடுகள் வைத்த செக்..!