நீட் தேர்வை எதிர்த்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் திமுக அரசு துரோகம் இழைத்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்த செய்ய முடியும், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுவதாகவும், 4 ஆண்டுகள் கழித்து இப்போது நீட் தேர்வு ரத்து அனைத்து கட்சி கூட்டம் போடுகிறார் என்றும் கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: நானே இப்படி பண்ணிட்டேனே..! மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்..!

இந்த நிலையில், வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் குறித்த விமர்சனம் செய்தார். அதிமுகவுக்கு அவ்வளவு தைரியம் இருந்தால் நீட் விவகாரம் குறித்து மத்தியில் பேசச் சொல்லுங்க என கூறினார். மேலும், திமுகவை 2026-ல் வீட்டுக்கு அனுப்பவோம் என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதிலளித்த துரைமுருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாவம் என கூறினார்.
இதையும் படிங்க: நொண்டி, கூன், குருடு.. ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..? வலுக்கும் கண்டனம்..!