நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா என்ற மாணவி அகில இந்திய அளவில் 39வது இடத்தை பெற்றுள்ளார் மேலும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது, தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் மட்டும் முதல்வன் அல்ல., தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் வார விழா.. இளம் படைப்பாளருக்கு விருது.. சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் வார விழா... இளம் படைப்பாளர் விருது... பேரவையில் சூப்பர் டூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்...