பெங்களூரு கனகநகர் பகுதியை சேர்ந்தவர் பஷிர். 33 வயதான இவர் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஹர் அஸ்மா என்ற 29 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே பஷிருக்கு ஹெப்பாலை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அறிந்த பாஹர் அஸ்மா தனது கணவனை கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் மனைவி சொல்வதை கேட்காமல் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்துள்ளார். இதனால் பஷிருக்கும் பாஹர் அஸ்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து இருவரின் குடும்பத்தாரும் இவர்களை சமாதனப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. எவ்வளவு சொல்லியும் கணவன் கேட்காமல் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்ததால் மனமுடைந்த பாஹர் அஸ்மா நேற்று முன்தினம் கணவர் வெளியே சென்றிருந்தபோது, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நூலிழையில் தப்பித்தார் கும்பமேளா மோனலிசா... இயக்குநர் கைது... எந்த வழக்கில் தெரியுமா?

இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஹர் அஸ்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பேத்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஹர் அஸ்மாவின் குடும்பத்தார் இது தற்கொலை அல்ல கொலை என்றனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனே, பாஹர் அஸ்மாவை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பஷிர் மற்றும் அஸ்மாவின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஹெப்பால் காவல்துறையினர் பஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுநீரக திருட்டில் மருத்துவர்கள்.. விசாரணையை முடுக்கிய நீதிமன்றம்..!