பகல் காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வழியில் பறக்க கூட தடை விதிப்பதாகவும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று நேரடியாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவ படையும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. தங்களுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் அறுதியிட்டு கூறி வந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் துணைப் பிரதமர் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடிச்சி நொறுக்குங்க.. சொன்ன மாதிரியே செய்த மோடி.. தவிடுபொடியாகும் பாகிஸ்தான்..!

தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என பாகிஸ்தானின் துணை பிரதமர் இஷாக் தார் பேசியுள்ளார். பகல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் துணை பிரதமர் இவ்வாறு பேசி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: கையில் கருப்புப்பட்டை அணிந்து தொழுகை நடத்துங்கள்! ஒற்றுமையை காட்டும் நேரம் இது.. அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்..!