கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி வரும் நிலையில் நான்காவது ஆண்டாக இன்றும், நாளையும் மாநாடு நடைபெறுகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மாநாடு.. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதலா.? அவசரமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

இந்த நிலையில், உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்த சந்திரசேகர் உதகைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்ட சந்திரசேகர் மாநாட்டில் பங்கேற்காமல் நெல்லைக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பல்கலைக்கழக துணை வேந்தர் திடீரென நிகழ்ச்சியை புறக்கணித்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் உள்ளவர்கள் யாரும் மாநாட்டிற்கு செல்லவில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, கோவை காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரின்ஸ், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி உள்ளிட்டோரும் ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். பெரும்பாலான பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்களும் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஆப்பு.? தமிழக ஆளுநருக்கு எதிரான உத்தரவு கேரள ஆளுநருக்கு பொருந்துமா.? உச்ச நீதிமன்றம் விசாரணை!