காஷ்மீரில் சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தான் காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் மோடி நேற்று பீகாரில் நடந்த கூட்டத்தில் சூளுரைத்திருந்தார்.

அதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான பணிகள் வேகம் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய இருப்பிடங்களில் தற்பொழுது இந்திய ராணுவம் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு பயங்கரவாதிகள் ஊடுருவி தான் அந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடைய வீடுகளை வெடிவைத்து தகர்த்தியுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளின் வீட்டை இடித்து மண்ணோடு, மண்ணாக இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியுள்ளது. ஆஸீப் மற்றும் ஆதில் என்கின்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், பாகிஸ்தானுக்கு சென்று பயிற்சி எடுத்து வந்தவர்கள் என்றும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கையில் கருப்புப்பட்டை அணிந்து தொழுகை நடத்துங்கள்! ஒற்றுமையை காட்டும் நேரம் இது.. அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்..!
இந்த இருவரும் பஹல்காம் தாக்குதலில் மிக முக்கியமான நபர்களாக இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள டிராலின் மோங்காமா பகுதியில் அமைந்துள்ள ஆசிப் ஷேக் மற்றும் பிஜ்பெஹாராவின் குரேயில் உள்ள மற்றொரு லஷ்கர் பயங்கரவாதியான அடில் குரீயின் வீடுகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன.
மேலும் ஓடி ஒழிந்திருக்கக்கூடிய அந்த பயங்கரவாதிகள் அனைவரையும் தேடக்கூடிய பணிகளும் வேகம் எடுத்திருக்கின்றன. பயங்கரவாதிகளுடைய இருப்பிடங்கள், அவர்களுக்கு அடைக்களம் கொடுத்த நபர்கள், வெளியிலிருந்து பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்களம் கொடுத்தவர்களுடைய இல்லங்கள் என்று ஒவ்வொரு பகுதியிலும் தற்பொழுது சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்..! முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!