ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன் எதிரொலியாக பாக்., உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கவர்னரை சின்ஹாவை சந்தித்த தளபதி, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஜனாதிபதி முர்முவிடம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டவருக்கான அனைத்து வகை விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளதை அடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் நாட்டிற்கு திரும்பும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பஞ்சாப்பின் அடாரியில் உள்ள இந்தியா - பாக்., எல்லை கதவு மூடப்பட்டுவிட்டது. உரிய ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் மட்டும் அடாரி வழியாக பாகிஸ்தானுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் தங்கள் ஆவணங்களை காட்டி உள்ளே வரலாம்.
இதையும் படிங்க: விடிய விடிய துப்பாக்கிச்சூடு.. தீவிரமடையும் தேடுதல் வேட்டை.. பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது..!

மற்றபடி புதிதாக வேறு யாருக்கும் நம் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில முதல்வர்களும், அவர்களது மாநிலத்திலும் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டினர் பற்றிய தகவல்களை உடனே சேகரிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பஞ்சாபின் அடாரியில் உள்ள இந்தியா - பாக்., எல்லை கதவு மூடப்பட்டுவிட்டது. உரிய ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் மட்டும் அடாரி வழியாக பாகிஸ்தானுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் தங்கள் ஆவணங்களை காட்டி உள்ளே வரலாம். மற்றபடி புதிதாக வேறு யாருக்கும் நம் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என்ற சூழல் நிலவுகிறது. இவ்வாறு பாகிஸ்தானுக்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் எனநந பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு நாடு முழுவதும் கோபமடைந்துள்ளனர்.
மேலும் இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி வலுவான பதிலடி கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். கணபதியின் ஆசீர்வாதம், அவரது ஞானம் மற்றும் சக்தியுடன் நாடு இந்த கடினமான காலத்தைக் கடந்துசெல்லும். நாடு இந்த நிலைமையை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் ஜெ.பி.நட்டா கூறினார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் சதி.. காஷ்மீரில் கணவனை இழந்த பெண் கண்ணீர்..!