தேசிய எஸ்சி ஆணையம், பழங்குடியினர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் ஆகியவை அளித்த 12க்கும் மேற்பட்ட ஆண்டு அறிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் 7 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரிடமும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையமும், தேசிய பழங்குடியினர் ஆணையமும் தங்கள் அறிக்கையை அளிக்கவில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டு அறிக்கையை குடியரசுத் தலைவரிடமும் வழங்கவில்லை.

இந்த 3 ஆணையமும் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கடமையாகும், இந்த அறிக்கையை அமல்படுத்துவதன் மூலம் இந்த சமூகத்தை பாதுகாக்க முடியும். ஆனால், 7 ஆண்டுகளாக அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த 3 சமூகங்களின் சமூகபாதுகாப்பு, நலன்கள் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் அதிகாரங்கள் இந்த ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!
கடந்த காலங்களில் இந்த ஆணையங்களின் பரிந்துரைகள் ஆளும் அரசுகள் கொள்கைகளை வடிவமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், இடஒதுக்கீட்டை முடிவு செய்யவும், க்ரீமிலேயர் அம்சங்களையும் முடிவு செய்யவும், சமூகத்தை வகைப்படுத்தவும், கட்டமைப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக அறிக்கைகளில், தேசிய எஸ்சி ஆணையத்தின் 2022-23ஆண்டு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் 2024 ம்ஆண்டின் நடுப்பகுதியில் வழங்கப்பட்டது, ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல தேசிய எஸ்டி ஆணையத்தின் அறிக்கைகளும் 2018 முதல் 2023 வரை குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஆனால், நாடாளுமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
வழக்கமான நடைமுறையின்படி, இந்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் மத்திய அரசு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேசிய எஸ்சி ஆணையம் கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டு அறிக்கையை தயாரித்து வருகிறது, இன்னும் குடியரசுத் தலைவரிடமே வழங்கவில்லை. தேசிய எஸ்டி ஆணையத்தின் 2023-24 அறிக்கை இன்னும் அச்சுக்கே செல்லவில்லை, 2024-25 வரைவு அறிக்கைதான் தயாராகியுள்ளது.

என்சிபிசி தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ 2022-23, 2023-24ம் ஆண்டு அறிக்கைகள் அச்சில் இருக்கின்றன, விரைவில் குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கப்படும்.2024-25ம் ஆண்டு அறிக்கையையும் தயாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார். தேசிய எஸ்டி ஆணையத்தின் 2015-16 அறிக்கை 2019ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது 2016-17, 2017-18ம் ஆண்டு அறிக்கைகள், 2023ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய எஸ்டி ஆணையத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த ஆணையங்களில் சிறந்த முறையில், ஆண்டு முழுவதும் பணியாற்றக்கூடிய வளங்களையும் நிபுணர்களையும் கொண்டிருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் அறிக்கை தாக்கல் சரியான நேரத்தில் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி வாகனங்களில் ‘பாஸ்டேக்’ இல்லை..! மே 1 முதல் புதிய முறை.. அறிமுகம் செய்கிறது மத்திய அரசு..!