இந்தியாவின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது பிரதமர் மோடி பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் குறித்து விவதிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. ஆனால், இக்கூட்டத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடி பிகாரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பிகாரில் இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றதாக எதிர்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரதமரை விமர்சித்தார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்கிற பெயரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். "நாட்டின் பெருமை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது நாட்டிக்கு மிகவும் துரதிருஷ்டமானது.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், பிரதமர் மோடி அதில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். பிரதமர் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்து நாட்டின் திட்டம் என்ன என்பதை விளக்கியிருக்க வேண்டும். அவர் எங்களிடமிருந்து என்ன வகையான உதவியை எதிர்பார்க்கிறார் என்பதை சொல்லியிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: உயிரை உலுக்கும் பயம்... POJK முகாம் பயங்கரவாதிகளை திரும்ப அழைக்கும் பாகிஸ்தான்..!

பிரதமர் மோடி நாட்டுக்கு பணவீக்கத்தையும் வேலையில்லா திண்டாட்டத்தையுமே தந்தார். இத்தகையவர்கள் நாட்டையே பலவீனப்படுத்துகிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வளர்ச்சியின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தை குஜராத்தாக மாற்ற 56 இஞ்ச் மார்புகள் தேவை என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவரின் 56 இஞ்ச் மார்பு சுருங்கிவிட்டது.
நாடுதான் அனைத்தையும்விட உயர்ந்தது, அதன் பின்புதான் கட்சி, மதம் எல்லாம். நாட்டுக்காக அனைவரும் ஒன்று படவேண்டும். நமது நாட்டில் அரசியலமைப்புதான் எல்லாவற்றுக்கும் மேலானது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ்தான் இயங்குகிறது. காங்கிரஸ் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது. பாஜக அதை உடைப்பதைப் பற்றியே பேசுகிறது" என்று கார்கே பேசினார்.
இதையும் படிங்க: 6 நாட்களாகியும் சவால்..! பஹல்காம் பயங்கரவாதிகளின் தடயத்தைக்கூட சேகரிக்காத இந்தியா..!