2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை விளையாடிய 13 போட்டியில் 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை ஆடி வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், விராட் கோலி நிதானமாக விளையாடி கூட்டணி அமைத்தார்.

ஒருபுறம் சக வீரர் க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாட, மறுபுறம் விராட் கோலி நங்கூரமிட்டு விளையாடினார். 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதன் மூலம், 2025 ஐபிஎல் தொடரில் மொத்தம் 443 ரன்கள் சேர்த்து, அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் கோலி. மேலும், 11வது முறையாக ஒரே ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் இத்தனை முறை ஐபிஎல் தொடர்களில் 400 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. இது ஒரு புறம் இருக்க, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே விராட் கோலி 1154 ரன்கள் சேர்த்து மாபெரும் சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: மழையால் கைவிடப்பட்ட KKR – PBKS ஆட்டம்… இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!!

இதற்கு முன், டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1134 ரன்கள் எடுத்ததே, ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் ஒரு அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் ஷிகர் தவான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1150 ரன்கள் சேர்த்து இருக்கிறார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் விராட் கோலி இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1104 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1098 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி, 16 புள்ளிகளைப் பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு இதுவரை ஆடிய 10 போட்டிகளில் ஏழு வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் பெங்களூர் அணி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.
இதையும் படிங்க: KKR வெற்றிக்கு 202 ரன்கள் இலக்கு... முதல் ஓவர் முடிவில் மழையால் நின்ற ஆட்டம்!!