தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே அதற்கான பணைகளை தொடங்கி விட்டனர். ஒருபுறம் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் தவெக தலைவர் விஜய்யும் பூத் கமிட்டி, ரோட்-ஷோ என தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். இதற்கிடையே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.
இதையும் படிங்க: மங்குனி ஆட்சி நடத்திய இபிஎஸ் திமுக அமைச்சரவை மாற்றத்தை விமர்சிப்பதா.? ஆர்.எஸ். பாரதி பொளேர்.!

மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மக்களுக்காக திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

எனவே அதுக்குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அடுத்தாண்டு தமிழ்நாட்டில் பல முனை போட்டி இருக்கும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் ஒரு பக்கம் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி, மறுபுறம் விஜய்யும் தனது தலைமையில் வலுவான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் என பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொன்முடிக்காக உயிர் தியாகம்.. திமுக தொண்டர் செயலால் உச்சக்கட்ட பரபரப்பு - தலைமைக்கு எச்சரிக்கையா?