சிந்து நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவதை மத்திய அரசு இன்று முதல் அதிரடியாக நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மீண்டும் பாகிஸ்தான் திமிராக பேசியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவிஷ் லெகாரி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைத்திருக்கிறது. இது போரை போன்ற ஒரு செயல். ஒரு கோழைத்தனமான சட்ட விரோதமான நடவடிக்கை. சிந்து நதிநீரின் ஒவ்வொரு சொட்டும் நம்முடையது. எனவே இந்தியாவின் இந்த முடிவை நாங்கள் முழு பலத்துடன் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் என கூறியிருக்கிறார்.

இந்தியாவின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு குழு இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதனை தொடர்ந்துதான் பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவிஷ் லகாரி இந்த கருத்துக்களை கூறியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து கடந்த 65 ஆண்டுகளில் இந்தியா இது போன்ற ஒரு முடிவை எடுப்பது இதுவே முதல்முறை. இது தொடர்பாக பாகிஸ்தானும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. சிந்து நதிநீரை நிறுத்துவது போருக்கு சமம் என தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்.. கெத்தான பதவியை கொத்தாக தூக்கப் போகும் பிடிஆர்..!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1960 ஆம் ஆண்டு போடப்பட்டதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்துள்ள முடிவு மிகவும் முக்கியமானது சுமார் 65 ஆண்டுகளாக இருந்த ஒப்பந்தத்தை இந்தியா முதல்முறையாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரமஸ்ரி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம், தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம் என கூறியிருக்கிறார்.

1960க்கு பிறகு இந்து பாகிஸ்தான் போர், கார்கில் போர் உள்ளிட்ட போர்கள் 2019ல் புல்வாமா மற்றும் 2016ல் உரி என பல தாக்குதல்கள் நடந்த போதிலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறவில்லை, ஊரி தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்த போதே பிரதமர் மோடி இது தொடர்பாக பேசியிருந்தார். அப்போது இரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இருப்பினும் அப்போதெல்லாம் ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு முடிவையும் இந்தியா எடுக்கவில்லை. ஆனால் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாளே இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது உலக வங்கி முன்னெடுப்பால் கையெழுத்தானது. இதில் ஏதாவது பிரச்சனை வந்தால் சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என அதில் எந்த ஒரு பாயிண்டும் இல்லை. மாறாக இப்போது பாகிஸ்தான் வசம் மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீர் பகிர்வு தொடர்பாக எழும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளின் ஆணையர்களை கொண்ட பிஐசி எனப்படும் நிரந்தர சிந்து நதி ஆணயம் உள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை பிஐசி ஆணயத்தால் தீர்க்க முடியாவிட்டால், அடுத்து உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் அது பரிந்துரைக்கப்படும். சமீபத்தில் கிஷன்ங்கா மற்றும் ரெட்லி நீர்மின் திட்டங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் கூட இந்த நடுநிலை நிபுணர்களிடமே விசாரணைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் இந்தியாவின் முடிவையே அந்த நடுநிலை குழு ஆதரித்திருந்தது. எனவே இந்த விவகாரத்திலும் அவர்கள் சூழலை கருத்தில் கொண்டே முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. இந்த வல்லுனர் குழு எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு கடைசியாக இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆப்ஷன் என்று பார்த்தால் இந்த விஷயத்தை பிரிவு ஒன்பதின் விதிகளின் கீழ் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு அதாவது பிசிஏ அதற்கு கொண்டு செல்லலாம். இருப்பினும் அங்கு பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் அயூப கானுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.
அந்த ஒப்பந்தத்தில் பத்தி மூன்றின் விதிகளின் கீழ் மாற்றி அமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் விதிகள், இரண்டு அரசும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தம் போடும் வரை அமலில் இருக்கும் என தெளிவாக கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: எதுக்குடா காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கணும்..? சுந்தரவல்லி லிஸ்டில் பியூஸ் மானுஷ் வெறித்தனம்..!