மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசினார். காஷ்மீரில் அமைதி நிலவுவதை பயங்கரவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அப்போது குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் மீண்டு எழுவதை தீவிரவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அதனால் தான் இது போன்ற சம்பவத்தை காஷ்மீரில் நிகழ்த்தி இருப்பதாகவும் தெரிவித்தார். தீவிரவாதிகளும், அவர்களுக்கு மேல் உள்ளவர்களும் காஷ்மீரில் அமைதி திரும்புவதை துளி அளவும் விரும்பவில்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!

காஷ்மீரை முடக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை அழித்து, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று திரள்வோம் என்றும் ஒற்றுமை நம் நாட்டின் பலம் எனவும் பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் பகல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அப்பாவிகளின் உயிர்களை எடுத்தவர்களை பழி தீர்க்காமல் இந்தியா ஓயாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் கொடூரமான பதிலடி எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளதாகவும் பிரதமர் பேசினார்.
இதையும் படிங்க: 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..! இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த திட்டம்..!