பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கிய பிறகு தைலாபுரம் தோட்டத்தில் குடும்ப உறுப்பினர் கவிதா, காந்தியை மட்டும் ராமதாஸ் சந்தித்து பேசினார். கட்சியின் பொருளாளர் திலகபாமாவை சந்திக்க மறுத்ததால் ஒன்னரை மணி நேரம் காத்திருந்து புறப்பட்டு சென்றார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கட்சியின் நிறுவனர் என்கிற அடிப்படையில் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அன்புமணி ராமதாசை கட்சியின் செயல் தலைவராகவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பாமகவினருடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாமகவின் பொருளாளர் திலகபாமா பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள மருத்துவர் ராமதாசின் இல்லத்தின் முன்பாக திரண்டு அன்புமணியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ்க்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் திடீர் ஆலோசனை... வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்புகள்!
காவல்துறையினரின் தலையிட்டைத் தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் மாலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, இளைய மகள் கவிதா, பாமகவின் பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், வழக்கறிஞர் பாலு, சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றனர்.
அப்போது பாமக பொருளாளர் திலகபாமா உட்பட கட்சி நிர்வாகிகளை சந்திக்க மறுத்த மருத்துவர் ராமதாஸ் மூத்த மகள் காந்திமதி மற்றும் இளைய மகள் கவிதா ஆகியோரை மட்டும் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் ஒன்றரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மருத்துவர் ராமதாசை சந்திக்காமலையே பாமக பொருளாளர் திலகபாமா புறப்பட்டு சென்றார். மருத்துவர் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த மகள் காந்திமதி மற்றும் இளைமகள் கவிதா ஆகியோர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் பாலு முன்னாள் எம் பி செந்தில் குமார் முன்னாள் எம் எல் ஏ கார்த்தி தலைமைநிலைய செயலர் அன்பழகன் ஆகியோர் ராமதாசை சந்தித்து பத்து நிமிடம் பேசினர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அன்பு'தான் எல்லாமே..! பாமகவில் ஜனநாயகப் படுகொலை... ராமதாஸுக்கு கடும் எதிர்ப்பு..!