பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் மனநிலையை மருத்துவரிடம் காண்பிக்கச் சொல்லுங்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடுமையாகச் சாடியுள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான்-இந்தியா இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேறவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ரத்த ஆறு ஓடுமா? உருட்டல், மிரட்டல் இங்க வேணாம்.. பிலாவல் பேச்சுக்கு பியூஸ் பதிலடி..!
இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டா ஜர்தாரி ஜியோ நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் “சிந்து நதிநீரை யாரும் பேரம்பேச அனுமதிக்கமாட்டோம். மோடி அரசு தன்னிச்சையாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டது. இந்தியாவுக்கு தெளிவான செய்தி ஒன்றை சொல்கிறேன், சிந்து நிதிதான் எங்களுடையது, எப்போதும் எங்களுடையது. அதை இந்தியா தடுத்தால், அதில் நீருக்குப்பதிலாக உங்கள் ரத்தம் ஓடும்” என வன்முறை தெறிக்க பேசியிருந்தார்.

பிலாவல் பூட்டோ குறித்து மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “போதும் போதும் பிலாவல் பூட்டை குறித்து பேசாதீர்கள். இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று எச்சரிக்கறோம். பிலாவல் பூட்டைவின் மனநிலையை மருத்துவரிடம் பரிசோதிக்க சொல்லுங்கள்,அவரின் பேச்சு மனப்பிறல் மாதிரி இருக்கிறது. இதை ஒருபோதும் பொறுக்கமாட்டோம். இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்” எனத் தெரிவித்தார்.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலும், பிலாவல் பூட்டோ பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில் “பாகிஸ்தான் ஒரு விரக்தியடைந்த நாடு, பயங்கரவாதத்தைப் பரப்புவதைத் தவிர அவர்கள் வேறு எதற்கும் முன்னுரிமை தரமாட்டார்கள். பிலாவல் பூட்டோ போன்ற அரசியல்வாதிகள் அங்கு இருப்பது உலகிற்கே துரதிர்ஷ்டம், அவரின் பேச்சை நான் கண்டிக்கிறேன், பாகிஸ்தான் மக்களும் பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு உடன்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பிலாவல் பூட்டோ பினாத்தல் பேச்சு..!