உலகளவில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வது இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. பொதுவாக காற்றால் உந்தப்படும் ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறியாகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன. அந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத தூய ஆற்றலாக மின்சாரத் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி, தமிழகம் முழுவதும் பத்தாயிரத்து 900 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதில், 9150 மெகாவாட் தமிழக மின்வாரிய மின்வெளி தடத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 1750 மெகாவாட் மத்திய மின் தொடர் அமைப்பு கழகத்தின் வழிதடத்தில் இணைக்கப்பட்டு பயன் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தான் தமிழக அரசு அனைத்து மின் உற்பத்தியில் 50 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மூலமாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னதாக பயன்பாட்டில் இருந்து வரும் காற்றாலைகளை அகற்றி விட்டு புதிதாக காற்றாலைகள் அமைக்க தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சி.எஸ்.ஆர். நிதி மோசடி.. ஆயிரத்துக்கும் அதிகமான எப்.ஐ.ஆர் பதிவு - பினராயி விஜயன் தகவல்..!

மேலும் இங்கு பயன்பாட்டில் இருந்து வரும் காற்றாலைகள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டதாலும் அவற்றின் செயல் திறன்கள் சற்று மோசமான நிலையை அடைந்துள்ளதுனாலும் ஹைப்ரெட் முறையில், அதாவது ஒரே இடத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்து உள்ளது.
இந்தத் திட்டமிடல் மின்வாரியத்தின் செலவினங்களை குறைப்பதற்கும் வழி வகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் பல கட்டமாக நடைபெற்ற நிலையில், பழைய காற்றாலைகள் அமைந்துள்ள இடங்களில் தற்போது 22 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 18 மெகாவாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையங்களும் பி.பி.பி என்றழைக்கப்படும் பொது மற்றும் தனியார் கூட்டு பங்கேற்பின் வாயிலாக அமைக்க மின்வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து இத்திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலை பெறுவதற்கு மின்வாரிய குழு தமிழக அரசுக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பியுள்ளது. முன்னதாக மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மின்வாரியம் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு, குத்தகை ஆண்டு காலம் வரை தனியார் நிறுவனமே அதன் சொந்த செலவில் பராமரிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பராமரிக்கப்பட்ட வரும் தனியார் மின் நிலையங்களில் இருந்து தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது அரசின் செலவீனங்களை குறைக்க வழி வகுத்தாலும், தமிழக மின்வாரியம் தனியார் மயமாகப்படுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!