பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் சிலர் கொண்டாட்டங்களையும், பாகிஸ்தானுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். மாறாக, இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனைச் சேர்ந்த சாஹில் கான், பஹல்காமில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதால் பொதுமக்கள் அடித்து துவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக, பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, கர்நாடகா மாநிலம், கலபுரகியில் இருந்து ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடிகளை கவனமாக அகற்றி, அவை சேதமடையாமல் பார்த்துக் கொள்வதைக் காட்டியது. கேமராவில் பதிவான அவர்களின் செயல்கள், நாடு முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியது.
இதையும் படிங்க: வக்ஃபு வழக்கு.. புதிய சட்டப்படி உறுப்பினர் நியமனம் கூடாது..! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வந்த போதிலும், பாகிஸ்தான் கொடிக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து கர்நாடக பெண்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். வைரலான அந்த வீடியோவில் ஒரு பெண் பாகிஸ்தான் கொடிக்கு அனுதாபம் காட்டுவது காணப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலை எதிர்த்து இந்து ஆர்வலர்களால் முதலில் கொடிகள் வைக்கப்பட்டன. ஆனாலும், ஆர்ப்பாட்டத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாததைக் காரணம் காட்டி கலபுரகி போலீசார் ஆர்வலர்களை கைது செய்து, பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு எதிராக பொது இடத்தில் கோபத்தை வெளிப்படுத்த அனுமதி தேவையா? என்ற கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில், மும்பையின், சாண்டாகுரூஸில் பாகிஸ்தான் கொடிகளை எரித்ததற்காக முஸ்லிம் கும்பல் ஒருவரை கொடூரமாகத் தாக்கியது. பாதிக்கப்பட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 15 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30–40 குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
WATCH - SHOCKING VIDEO from Mumbaipic.twitter.com/0tjpVh9vq9
— Times Algebra (@TimesAlgebraIND) April 27, 2025
இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாதிகளை ஆதரித்ததாக செய்தி நிருபர் முகமது ஜாபிர் உசேன், அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோமாளித்தனமான வக்பு சட்டம்.. காங்கிரஸ் ஆட்சியில் ரத்து.. இஸ்லாமியர்களுக்கு ப.சிதம்பரம் வாக்கு.!